Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பயிற்சி கூட்டம்

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பயிற்சி கூட்டம்

-

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பயிற்சி கூட்டம்

சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதலாக 47 துணை உதவி தேர்தல் ஆணையர்கள் பணியில் ஈடுபட உள்ளனர் என சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பயிற்சி கூட்டம்

சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியவுள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு சென்னை ரிப்பன் கட்டத்தில் உள்ள அம்மா மாளிகையில் மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் முதற்கட்ட பயிற்சியானது வழங்கப்பட்டது.

பயிற்சியில் வாக்கு என்னும் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு வாக்கு எண்ணும் மையங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பதட்டம் அடையாமல் செயல்பட வேண்டும் எனவும் எந்தவித தவறுகளும் ஏற்படமால் வாக்குகளை எண்ண வேண்டும் எனவும் பணியாளர்களுக்கு தங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள மேசைகளில் அமர்ந்து நிதானமாக செயல்பட வேண்டும் என ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பயிற்சி கூட்டம்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், திட்டமிட்டபடி தேர்தல் ஆணையரின் அறிவுரையோடு வாக்கு எண்ணிக்கைகான முதற்கட்ட பயிற்சியானது பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 47 துணை உதவி தேர்தல் ஆணை பணியில் ஈடுபட உள்ளர்கள்.

அனைத்து பணிகளும் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும், 3 ஆம் தேதி இரண்டாம் கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும் சில நேரங்களில் ஊடங்களில் முன்கூட்டியே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுகின்றன. அவற்றை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பயிற்சி கூட்டம்

தொடர்ந்து பேசிய அவர், வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள பணியாளர்களுக்கு எளிமையான முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறதாகவும், வாக்கு எண்ணும் பணியாளர்களுக்கு பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் பயிற்சி வழங்கி வருகிறார்கள் எனவும் கூறினார். சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் தலைமையில் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணிகள் வழங்கப்படும். தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். ஆனால் தபால் வாக்குகளின் முடிவுகள் இறுதியில் தான் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

MUST READ