தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிற்சங்கம் அறிவித்த வேலை நிறுத்தம் நள்ளிரவில் தொடங்கியது. ஓய்வூதியர்களுக்கு நிலுவைத் தொகை உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும் ஹீரோவாக மிரட்ட வரும் எஸ்.ஜே. சூர்யா…. ரெமோ பட இயக்குனருடன் கூட்டணி!
சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவை வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். போக்குவரத்து தொழிற்சங்க வேலை நிறுத்தத்தில் தொ.மு.ச. மற்றும் ஐ.என்.டி.யு.சி. சங்கங்கள் பங்கேற்கவில்லை. மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் வேலை நிறுத்தத்தில் இருந்து விலகுவதாக ஐ.என்.டி.யு.சி. அறிவித்துள்ளது.
சென்னையில் வழக்கம் போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து ஊழியர் முன்னேற்ற சங்கத்தின் பொருளாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் மொத்தம் உள்ள 3,200 பேருந்துகளையும் வழக்கம் போல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் சென்னையில் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஐயப்பன்தாங்கல் பணிமனையில் இருந்து குன்றத்தூர், பிராட்வே, தி.நகர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் அட்டவணைப்படி இன்று (ஜன.09) MTC பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த ரசிகர்கள்…. வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்த யாஷ்!
இதனிடையே, எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து 10 சதவீதம் கூடப் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.