Homeசெய்திகள்தமிழ்நாடுதனியாரிடமிருந்து பஸ்களை வாடகைக்கு பெற்று இயக்க போக்குவரத்து துறை முடிவு!

தனியாரிடமிருந்து பஸ்களை வாடகைக்கு பெற்று இயக்க போக்குவரத்து துறை முடிவு!

-

- Advertisement -

தமிழகத்தில் முதல் முறையாக, எஸ்இடிசி எனப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சிலீப்பர் வகை பஸ்களை, தனியாரிடமிருந்து வாடகைக்கு பெற்று இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.தனியாரிடமிருந்து பஸ்களை  வாடகைக்கு பெற்று இயக்க போக்குவரத்து துறை முடிவு!இதற்கான டெண்டர் போக்குவரத்து துறை சார்பில், வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அரசு விரைவில் போக்குவரத்து கழகம் சார்பிலும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

கோடை காலங்களில் பொதுமக்கள் அதிகளவில் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வதால் அதனை கருத்தில் கொண்டு விரைவு போக்குவரத்து கழகம் இந்த முடிவை எடுத்துள்ளது. சீசன் காலங்களில் பொதுமக்களின் வருகையை சாதகமாக்கிக் கொண்டு ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க போக்குவரத்து துறை இந்த நடவடிக்கையை  மேற்கொண்டுள்ளது.

முதல் கட்டமாக 20 தனியார் ஆம்னி பேருந்துகளை வாடகைக்கு பெற்று மே முதல் வாரத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மே-2 கட்சியின் போதுக்குழு கூட்டம்:தவறாமல் கலந்து கொள்ளும்படி எடப்பாடி அறிவுறுத்தல்

MUST READ