Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!

அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!

-

 

அரசுப் பேருந்து ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் உறுதியளித்துள்ளனர்.

கன்னியாகுமரி, நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, நிலுவைத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து சேவைகள் வழக்கம் போல் இயங்கி வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ள தொழிற்சங்கத்தினர், தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து பணிமனைகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் இன்று (ஜன.10) விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழிற்சங்கங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “எங்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளையே அரசிடம் கோருகிறோம்” என்றார்.

“முரசொலி நிலம் வழக்கு- ஆணையம் விசாரிக்கலாம்”- உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

இதையடுத்து, உயர்நீதிமன்ற அறிவுறுத்தலைத் தொடர்ந்து, அரசு போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், உடனடியாக நாளை (ஜன.11) பணிக்கு திரும்புவதாகவும் உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்தனர்.

நாளை பணிக்கு வரும் தொழிலாளர்கள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அவர்களுக்கான பணிகளை முழுமையாக ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வரும் ஜனவரி 19- ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டீர்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.

“அரசு பேசசுவார்த்தைக்கு அழைக்கவில்லை”- சவுந்தரராஜன் பேட்டி!

இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களுடன் வரும் ஜனவரி 19- ஆம் தேதி முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

MUST READ