போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தை நாளைக்கு (ஜன.08) ஒத்திவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலைஞர் 100 விழாவில் கலந்துகொள்ளாத விஜய்… கிளம்பியது புதிய சர்ச்சை
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சி.ஐ.டி.யு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் நடத்துநர்கள், ஓட்டுநர்கள் மற்றும் ஓய்வுபெற்ற நடத்துநர்கள், ஓட்டுநர்கள் மற்றும் அவர்களின் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 09- ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகஅறிவித்திருந்தனர் .
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை செயலாளர், நிதித்துறைச் செயலாளர், தொழிலாளர் நல ஆணையர் ஆகியோர் தலைமையில் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், உடன்பாடு எட்டப்படவில்லை.
மூத்த இயக்குனருடன் புதிய படத்தில் இணையும் மோகன்லால்!
இந்த சூழலில், போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் இன்று (ஜன.07) நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை நாளைக்கு (ஜன.07) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசுப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.