பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் பல்வேறு துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து சாதனை விளக்க நிகழ்ச்சி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா துறைமங்கலம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
![பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/05/Siva-1.jpg)
இவ்விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ரூ.9 கோடி செலவில் 892 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் முன்னிலையில் வழங்கினார்.
இந்தவிழாவில் பெரம்பலூர் மாவட்டத்தில் இரு ஆண்டுகளில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து சாதனை விளக்க மலரினை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டார்.
வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை விரைந்து நிறைவேற்றுக- ராமதாஸ்
பின்னர் அமைச்சர் பேசும்போது, பெரம்பலூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எறையூர் கிராமத்திற்கு நேரடியாக வந்து காலனி தொழில் பூங்கா கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி உள்ளார்.
இதன் மூலம் சுமார் பத்து ஆயிரம் நபர்களுக்கு நம்முடைய பகுதியில் வேலை கிடைக்கும். அரசால் அனைவருக்கும் அரசுத் துறையில் வேலை வழங்க முடியாது என்ற காரணத்திற்காக தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைத்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்களை பெரம்பலூரில் நடத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என்ன தேவை என்பதனை அறிந்து, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பல்வேறு திட்டங்களை அறிவித்தது மட்டுமல்லாமல் அதனை செயல்படுத்தி வருபவர்தான் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சி.ராஜேந்திரன், வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.