Homeசெய்திகள்தமிழ்நாடுடி.ஆர்.பி தேர்வு முடிவுகள்: அரசு பள்ளிகளில்  இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை

டி.ஆர்.பி தேர்வு முடிவுகள்: அரசு பள்ளிகளில்  இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை

-

டி.ஆர்.பி தேர்வு முடிவுகள்: அரசு பள்ளிகளில்  இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கைஅரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என டிஆர்பி தேர்வெழுதிய தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 2,767 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை 21-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்திய இத்தேர்வை பல்வேறு மையங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஏற்கெனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போட்டித் தேர்வை நடத்தி ஒன்றரை மாதம் ஆகியும் இன்னும் கீ ஆன்சர் வெளியிடப்படவில்லை. இதை உடனடியாக வெளியிட வேண்டும். காலியிடங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்று டிஆர்பிக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தேர்வர்கள் கூறியது, ”அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியில் 1,768 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் காலியிடங்களின் எண்ணிக்கை 2,768 ஆக உயர்த்தப்பட்டது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு முடிந்து ஒன்றரை மாதம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் கீ ஆன்ஸரை வெளியிடாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் தாமதம் செய்து வருகிறது. அதே டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் முடிந்து ஒரே வாரத்தில் கீ ஆன்ஸர் வெளியிடப்பட்டுவிடும். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளில் மட்டும் கீ ஆன்ஸர் வெளியிடுவதற்கு மாதங்கள் ஆகிவிடுகின்றன.

கடந்த 12 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம் எதுவும் நடைபெறவில்லை.

பல கோடி மதிப்புடைய காரில் நடிகர் அஜித்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அரசு நிர்ணயித்துள்ள ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரத்தின்படி அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பதவியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன எனவும்  தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.

எனவே, காலியாகவுள்ள 8 ஆயிரம் பணியிடங்களையும் தற்போது நடந்துள்ள போட்டித் தேர்வை கொண்டு நிரப்ப தொடக்க கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய ஆசிரியர்களை தேர்வு செய்வதில் ஏற்படும் காலவிரயம் தவிர்க்க காலியிடங்களை அதிகரித்து கூடுதல் ஆசிரியர்களுக்கு பணிவாய்ப்பு அளிக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும் என அவர்கள் கூறினர்.

MUST READ