
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய அமைச்சர் கூறியதாக தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!
டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரனை நேரில் சந்தித்த தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, முதலமைச்சர் கொடுத்து அனுப்பிய முறையீட்டு கடிதத்தை வழங்கினார்.
பின்னர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். உடன் சென்ற கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்களும் மத்திய அமைச்சரிடம் நடந்தவற்றை எடுத்துரைத்தாக டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
“நாட்டிற்காகத் தியாகங்கள் செய்த இந்திரா காந்தி”- ராகுல் காந்தி உருக்கம்!
இலங்கை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்ததாக டி.ஆர்.பாலு கூறினார்.