வீரராக பிறந்து, வீரராக வாழ்ந்து மறைந்தவர் என்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என கலைஞர் பேசியதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது
திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய விடுதலைப் போருக்காக தன்னையே ஒப்படைத்துக்கொண்டு உழைத்த
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் நினைவிடத்தில்
இன்றையதினம் தான் மரியாதை செலுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
“வீரராக பிறந்தார்; வீரராக வாழ்ந்தார்; வீரராக மறைந்தார்; மறைவுக்குப்பிறகும் வீரராக போற்றப்படுகிறார்” என்று கலைஞர் அவரை புகழ்ந்து பேசியுள்ளதாகவும் முதலமைச்சர் புகழாரம் சூட்டினார். அத்தகைய தியாகியை போற்றும் அரசாக, திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது -9