சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ், ஆங்கிலம், ஹுந்தி என மும்மொழியில் அறிக்கை. இந்தி திணிப்பை தொடங்கியது. தினசரி வானிலை அறிக்கைகள் தமிழ் & ஆங்கிலத்தில் சென்னை வானிலை மையம் வெளியிட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாவது மொழியாக ஹிந்தியிலும் வழங்க துவங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கின்ற முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாடும் அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மொழிப் பிரச்சினை தொடர்ந்து சர்ச்சையாகி வரும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மூன்றாவது மொழியாக இந்தியில் அறிக்கை வாசிக்க தொடங்கி உள்ளது. கேரளாவில் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது, ஆந்திராவில் ஆங்கிலம், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகள் பயன்படுத்தபடுகிறது.
தென் இந்திய மாநிலங்களின் முதன் முதலாக சென்னை வானிலை ஆய்வு மையத்தில் மூன்றாவது மொழியாக ஹிந்தியிலும் அறிக்கை வழங்க துவங்கியுள்ளது. இது பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
நாளை தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் – நிர்வாகிகளுடன் தலைவர் உரை