போக்குவரத்து ஊழியர்களுடன் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை
போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
நாளை 31ஆம் தேதி போக்குவரத்து கழக நிர்வாகத்தினருக்கும், போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களுக்கும், தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்து உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர் நடத்துனர் நியமனங்களை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் நேற்று திடீர் போராட்டம் நடத்தினர். நேற்று நடைபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் பேச்சுவார்த்தையில பங்கேற்குமாறு தொழிற்சங்கத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மாலை சென்னையில் டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெறும் பேச்சு வார்த்தையில் போக்குவரத்துறை உயர் அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை, தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். சிஐடியு , தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது குறிப்பிடதக்கது.