தமிழக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ள டி.ஆர்.பி.ராஜாவின் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்!
தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழு தலைவரான டி.ஆர்.பாலுவின் மகனான டி.ஆர்.பி.ராஜா உளவியல் மற்றும் மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்றவர். 46 வயதான டி.ஆர்.பி.ராஜா கடந்த 2011- ஆம் ஆண்டு முதல் மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார்.
அஜித்- மகிழ் திருமேனி கூட்டணியின் ‘விடா முயற்சி’… அசத்தலான லேட்டஸ்ட் அப்டேட்!
கடந்த 2021- ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், டி.ஆர்.பி.ராஜா தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினராக உள்ளார். சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவராகத் திறம்பட பணியாற்றிய இவர், பல்வேறு இடங்களில் ஆய்வுக் கூடங்களை நடத்தி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம், வன விலங்குகள் பாதுகாப்பு காலநிலை மாற்றம் இயற்கை விவசாயம் உள்ளிட்டவற்றின் அவசியத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றவர்.
கட்சியைப் பொறுத்தவரை, அவர் கடந்த 2021- ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தி.மு.க.வின் வெளிநாடு வாழ் தமிழர்கள் அணியின் முதல் செயலாளராக நியமிக்கப்பட்டார். தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளராக இருந்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பணிச்சுமை காரணமாக அந்த பதவியில் இருந்து விலகியதை அடுத்து, அந்த பொறுப்பிற்கு டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டார்.
சாய் பல்லவி நீங்கள் என் படத்தில் வந்தது என் பாக்கியம்… புகழ்மாலை சூடிய இயக்குனர்!
நாளை (மே 11) காலை 10.30 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.