Homeசெய்திகள்தமிழ்நாடுகோவையில் யானை தந்தங்கள் விற்பனை செய்ய முயற்சி... பெண் உள்ளிட்ட 5 பேர் கைது!

கோவையில் யானை தந்தங்கள் விற்பனை செய்ய முயற்சி… பெண் உள்ளிட்ட 5 பேர் கைது!

-

கோவை, தடாகம் அருகே தனியார் குடோனில் யானை தந்தங்களை பதுக்கிவைத்து விற்பனை செய்ய முயன்ற பெண் உள்ளிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் தடாகம் அருகேயுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக யானை தந்தங்களை விற்பனை செய்ய சிலர் முயற்சிப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், வனத்துறை அதிகாரிகள் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் குடோனில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு டிராவல் பேக் ஒன்றில் விற்பனைக்காக 2 யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

arrested

இதனை அடுத்து, யானை தந்தங்களை பறிமுதல் செய்த வனத்துறையினர் இவற்றை பதுக்கியதாக கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சுமதி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆஸாத்அலி, கோவை சங்கனூரை சேர்ந்த நஞ்சப்பன், வெள்ளிமலையைச் சேர்ந்த சந்தோஷ், பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜுலு ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் யானை தந்தங்கள் வெங்கடபுரத்தை சேர்ந்த செந்தில்வேலன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனை அடுத்து, அவரையும் கைதுசெய்த வனத்துறையினர் பின்னர் 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

MUST READ