ஈபிஎஸ்-ஐ வீழ்த்தாமல் ஓயமாட்டேன்; எதைக்கண்டும் பயமில்லை- டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தாமல் ஓயமாட்டேன், எனக்கு எதைக்கண்டும் பயமில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அமமுக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய டிடிவி தினகரன், “என்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்த பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நன்றி. நம் கட்சியின் கிளை இல்லாத ஊரே இல்லை என்ற நிலையை எட்டியுள்ளோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும். அதிமுக கட்சியானது எம்ஜிஆர், ஜெயலலிதா பயன்படுத்திய வெற்றிச் சின்னத்தையும், பணபலத்தையும் வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அமமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கவில்லை, மதிய உணவு மட்டுமே கொடுத்துள்ளோம்.
எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தாமல் ஓயமாட்டேன், எனக்கு எதைக்கண்டும் பயமில்லை. எடப்பாடி பழனிசாமியிடம் ஒருபோதும் அடைக்கலம் ஆக மாட்டேன். ஈபிஎஸ் துரோகத்தை மன்னிக்க மாட்டேன். வழக்குகள் மீதான அச்சத்தில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளனர். அமமுகவின் கிளை இல்லாத ஊரே இல்லை என்னும் நிலையை எட்டியுள்ளோம். மக்களிடம் நல்ல மதிப்பு உள்ளது. 2026 ஆம் ஆண்டு நிச்சயம் ஆட்சியில் அமர்த்துவார்கள்” என்றார்.