Homeசெய்திகள்தமிழ்நாடுதூத்துக்குடி பனிமய மாதா கோவில் 442வது ஆண்டு பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

தூத்துக்குடி பனிமய மாதா கோவில் 442வது ஆண்டு பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

-

உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

தூத்துக்குடி கடற்கரை சாலையில் உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு 442-ம் ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. காலையில் கொடியேற்றதிற்கு முன்பு மறைமாவட்ட ஆயர் ஸ்டிபன் அந்தோணி, பனிமய மாதா பேராலய பங்குதந்தை ஸ்டார்வின் ஆகியோர் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து பனிமயமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக அருள்தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்குதந்தைகள் பொதுமக்கள் கொடியை பிடித்து ஏற்றினர். அந்த நேரம் அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் மரியே வாழ்க முழக்கம் விண்ணை பிளக்க ஒலித்தது. மேலும் பக்தர்கள் புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். இவ்விழாவில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இன்று கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவானது பத்து நாட்கள் காலை, மாலை சிறப்பு திருப்பலிகள் நடைபெறுவதோடு வரும் ஆக்ஸ்ட் 5-ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர் பவனி வெகு சிறப்பாக நடைபெறும் .‌விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

MUST READ