Homeசெய்திகள்தமிழ்நாடுதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு - மறுஆய்வு மனு தள்ளுபடி!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – மறுஆய்வு மனு தள்ளுபடி!

-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரி ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஸ்டெர்லைட்

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைய மூட கடந்த 2018 மே 28-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் முடிவு சரியானது என்று கூறி, ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. இதனை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய உத்தரவு சரிதான் என்று கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

ஓய்வுப் பெற்ற நீதிபதிகளுக்கு எதிரான வழக்கு!
File Photo

இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், வேதாந்தா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தீர்ப்பை சீராய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MUST READ