Homeசெய்திகள்தமிழ்நாடுஇரண்டாம் கட்ட கல்வி விருது விழாவில் தவெக நிர்வாகிக்கு திடீர் உடல்நலக்குறைவு

இரண்டாம் கட்ட கல்வி விருது விழாவில் தவெக நிர்வாகிக்கு திடீர் உடல்நலக்குறைவு

-

இரண்டாம் கட்ட கல்வி விருது விழாவில் தவெக நிர்வாகிக்கு திடீர் உடல்நலக்குறைவால் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்த சம்பவம் இவ்விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம் கழகம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவானது கடந்த வாரன் ஜீன் 28-ம் தேதி 20 மாவட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மீதமுள்ள 19 மாவட்ட மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதற்காக சென்னை திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு அதிகாலையே விஜய் வருகை புரிந்துள்ளார்.

பின்னர் கல்வி விருது வழங்கும் விழா அரங்குக்கு வந்த தவெக தலைவர் விஜய் 10 மற்றும் 12ம் வகுப்பில் சாதித்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரம் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவால் வலிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்து கீழே சரிந்து விழுந்தார். இதனைக் கண்டு அருகிலிருந்த சக நிர்வாகிகள் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் ஆம்புலன்ஸில் ஏற்றி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

MUST READ