தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது, என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் பேசியுள்ளார்.
இந்நிலையில் இன்று 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை வழங்குகிறார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக இன்று 21 மாவட்ட சேர்ந்த மாணவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு நடிகராக மட்டுமே மாணவர்களை சந்தித்த விஜய் மாணவர்களுக்கு காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடாதீர்கள் போன்ற பல நல்ல அறிவுரைகளை வழங்கினார். அதேசமயம் விஜய்யின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டது. எனவே விஜய் இந்த ஆண்டு அரசியல்வாதியாக, தவெக தலைவராக மாணவர்களை சந்திக்க உள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்காக விஜய் காலையிலேயே மண்டபத்திற்கு வந்துள்ளார்.
சற்று முன் கல்வி விருது விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய், தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்கள் என்பது அரசியலில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் தலைவர்கள் உருவாக வேண்டும் . நன்கு படித்தவர்கள் அரசியலை தங்களின் லட்சியமாக வைத்துக் கொள்ளும் காலம் வரவேண்டும். ஒரு சில அரசியல் காட்சிகள் செய்யும் பொய்யான பிரச்சாரத்தை நம்பாமல் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையிலும் எனக்கு அச்சமாக உள்ளது. எல்லா துறையுமே நல்ல துறை தான் நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் முழு ஈடுபாட்டோடு 100 சதவீதம் உழைப்பை போட்டால் வெற்றி நிச்சயம் .அதனால் உங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுங்கள் என்றார்.