புதுக்கோட்டையில் இருசக்கர வாகனத்தின் மீது வருவாய் கோட்டாட்சியரின் கார் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிபவர் ஐஸ்வர்யா. இவர் இன்று காலை பணி தொடர்பாக தனது காரில் திருமயம் நோக்கி சென்று கொண்டிருந்தார். புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் ஒன்று, எதிர்பாராத விதமாக கோட்டாட்சியரின் காரின் மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் கோட்டாட்சியரின் கார் ஓட்டுநர் காமராஜ் காயமடைந்தார். நல்வாய்ப்பாக கோட்டாட்சியர் காயம் இன்றி தப்பிநார். தகவலின பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயம் அடைந்த ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.