வரும் நவம்பர் 12- ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படுவதையொட்டி, ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவை இந்திய ரயில்வே நேற்று (ஜூலை 12) காலை 08.00 மணிக்கு தொடங்கிய நிலையில், சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
15,000 கையடக்கக் கணினிகளை வாங்குவதற்கான டெண்டர் வெளியீடு!
அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது நாளாக இன்று (ஜூலை 13) காலை 08.00 மணிக்கு அனைத்து ரயில்வே கவுண்ட்டர்கள் மற்றும் IRCTC இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில், இரண்டு நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தது.
குறிப்பாக, நெல்லை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் படுக்கை வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என தென் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் சூறைக்காற்றுடன் மழை- விமான சேவைகள் பாதிப்பு!
இன்று ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவுச் செய்வோர் நவம்பர் 10- ஆம் தேதியும், நாளை முன்பதிவுச் செய்வோர் நவம்பர் 11- ஆம் தேதியுடன் ரயில்களில் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.