அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவர் மின்சாரம் பாய்ந்து பலி
கவரைப்பேட்டை அடுத்த மரம் வெட்டுவதற்காக இருச்சக்கர வாகனத்தில் சென்ற போது அறுந்து கிடந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்தது இருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த சின்ன புலியூரை சேர்ந்த ரமேஷ், திடீர் நகரை சேர்ந்த ராவனய்யா ஆகிய இருவரும் மரம் வெட்டுவதற்காக இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். சின்னபுலியூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அறுந்து கிடந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்தது இருவர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கவரைப்பேட்டை போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.