- Advertisement -
பைக் ரேசில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது குந்தாரப்பள்ளி அருகே உள்ள பந்தாரப்பள்ளி கிராமத்தின் அருகே வந்தபோது இளைஞர்கள் வந்த இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் மத்திகிரியை சேர்ந்த சபரி (20), பெங்களூரை சேர்ந்த ஸ்ரீஹர்ஷா (27) என்ற இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஓசூரை சேர்ந்த தவிப்கான் (23) என்பவர் பலத்த காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் உடலை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.