Homeசெய்திகள்தமிழ்நாடுஒடிசா விரைந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஒடிசா விரைந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

-

ஒடிசா விரைந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ரயில் விபத்து நடந்த ஒடிசா மாநிலம் பாலசேர்க்கு தமிழக அரசு சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கூடுதல் தலைமை செயலாளர் பணிந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த், ஆசிரியர் தேர்வாணைய குழுவின் தலைவர் அர்ச்சனா பாட்நாயக் ஆகியோர் கொண்ட குழு விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்றனர்.

udhayanidhi stalin
udhayanidhi stalin

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி இந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்ததால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் இந்த ரயிலில் பயணித்திருக்க வாய்ப்பு இருக்கிறது இதன் காரணமாக தமிழ்நாடு அரசும் நேற்றிலிருந்து மீட்பு பணிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது. மீட்பு பணிகளை துரிதப்படுத்த இன்று தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் ஒடிசா சென்றனர். அதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டிருந்தது. அரசு அதிகாரிகளும் அமைச்சர்களுடன் சென்று இந்த மீட்பு பணியில் துரிதப்படுத்தவும் மீட்பு பணிகளை தீவிரமாக செயல்படுத்தவும் ஒடிஷா மாநிலத்திற்கு ரயில் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் பார்வையிட சென்றனர்.

Image

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் நானும் போக்குவரத்துதுறை அமைச்சரும் அரசு அதிகாரிகளும் ஒடிசா செல்கிறோம். விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்று சரியாக தெரியவில்லை. ஆனால் வரக்கூடிய செய்தி வருத்தம் அளிக்கிறது.நேரடியாக அங்கு சென்று பார்த்த பின் தகவல் தெரிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் டிவிட்டர் பக்கத்தில், “கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது வேதனையளிக்கிறது. இவ்விபத்தில் பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் சிவசங்கர்
மற்றும் அரசு அதிகாரிகளுடன் இன்று ஒடிசா சென்று மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கவுள்ளோம். இவ்விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தமிழ்நாடு அரசு துணை நிற்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

MUST READ