Homeசெய்திகள்தமிழ்நாடுநிலக்கரி சுரங்கங்களை அரசு அனுமதிக்காது- உதயநிதி ஸ்டாலின்

நிலக்கரி சுரங்கங்களை அரசு அனுமதிக்காது- உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

நிலக்கரி சுரங்கங்களை அரசு அனுமதிக்காது- உதயநிதி ஸ்டாலின்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

Image

கடந்த 2020 பிப்ரவரி மாதம் காவிரி படுகை பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது காவிரி படுகைப் பகுதியில் படிப்படியாக தொடர்ந்து மேலும் ஆறு நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் திட்டம் இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி ஒட்டுமொத்த டெல்டா பகுதியினையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்நிலையில் தஞ்சை வடக்கு மாவட்டத்திற்காக கும்பகோணத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தஞ்சையில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் புதிய நிலக்கரி சுரங்கங்களை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. இவ்விவகாரம் தொடர்பாக நாளை சட்டப்பேரவையில் பேச உள்ளோம். காவிரி டெல்டாவை அழிக்க வரும் நிலக்கரி சுரங்கங்களை  மாநில அரசு நிச்சயம் அனுமதிக்காது. இது குறித்து நாளை சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவிப்பார்” என்றார்.

MUST READ