நீட் தேர்வு போராட்டம் நாடகமாகமா? – ஈபிஎஸ்க்கு உதயநிதி கேள்வி
நீட் தேர்வு போராட்டம் நாடகமாகவே இருந்தாலும் அதிலாவது ஈபிஎஸ் பங்கேற்று இருக்கலாமே? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நீட் தேர்வு போராட்டம் நாடகமாகவே இருந்தாலும் அதிலாவது ஈபிஎஸ் பங்கேற்று இருக்கலாமே? நீட் தேர்வு போராட்டத்தின் போது ஈபிஎஸ்-க்கு
2 கோரிக்கைகளை முன்வைத்தோம், ஒருவேளை நீட் தேர்வு ரத்தானால் அதற்கான பாராட்டை ஈபிஎஸ் எடுத்துக் கொள்ளலாம் என கூறினோம்.
சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை உண்மைதானா என பகுத்தறிந்து கொண்டு அனைவரும் பகிர வேண்டும், இளைஞர்களாகிய நீங்கள் பொறுப்புணர்வுடன் சமூக வலைதளங்களையும் பயன்படுத்த வேண்டும். ஒரு சிறிய வதந்திதான் மிகப்பெரிய பிரச்சனைகளை சமூகத்தில் உருவாக்குகிறது. ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசுத் தினத்திற்காக என்.எஸ்.எஸ். மாணவர்கள் தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு ரயிலில்தான் சென்றுள்ளனர். அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி இனி விமானத்தில் செல்ல ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.