Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி- உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி- உதயநிதி ஸ்டாலின்

-

சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி- உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் சர்வதேச ஹாக்கி போட்டித் தொடருக்காக தனியாக நிதி ஒதுக்கி, செஸ் ஒலிம்பியாட் போன்று மாணவர்கள் மத்தியிலும் போட்டித் தொடரை கொண்டு செல்வோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

udhayanidhi stalin tn assembly

சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் சர்வதேச ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டிகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். போட்டிகள் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், அது குறித்த அறிவிப்பை வெளியிடும் நிகழ்வு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் போலோ நாத் சிங், தமிழ்நாடு விளையாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், சாம்பியன்ஸ் டிராபி 2023 தொடரின் சென்னை இணை ஒருங்கிணைப்பாளர் சேகர் ஜே.மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஒடிசாவில் நடைபெற்ற ஹாக்கி உலகக் கோப்பையை தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலோடு அங்கு சென்று பார்த்த பிறகே தமிழகத்தில் இதுபோல ஹாக்கி போட்டிகள் நடத்த வேண்டும் என திட்டமிட்டேன். ஆடவருக்கான இந்த ஆசிய ஹாக்கி கோப்பை தொடர், 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடத்தப்படவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டுத்துறை மீது தனி கவனம் செலுத்திவருகிறார். இந்த போட்டிகளை நேரம் இருந்தால் அவர் துவக்கி வைப்பார்.
இந்த ஹாக்கி தொடருக்காக இனி மேல் தான் நிதி ஒதுக்கப்பட உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை போன்று இதனை தமிழ்நாடு மக்கள், மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல தனி கவனம் செலுத்துவோம்” என்றார்.

MUST READ