Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்று பள்ளிச் செல்லும் மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் கவனம் செலுத்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன் -...

இன்று பள்ளிச் செல்லும் மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் கவனம் செலுத்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன் – உதயநிதி!

-

இன்று பள்ளிச் செல்லும் மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் கவனம் செலுத்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன் என இளைஞர் மேம்பாட்டுத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளி திரும்பும் நாள் இன்று. மாண்புமிகு முதலமைச்சர் @mkstalinதலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் கல்வியில் முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டிற்கு வலுசேர்க்கும் விதத்தில், மாணவச்செல்வங்கள் கல்வியிலும் விளையாட்டு உள்ளிட்ட தனித்திறமைகளிலும் கவனம் செலுத்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன். மாணவச்செல்வங்களுக்கு பெற்றோர்களும் ஆசிரியப் பெருமக்களும் உறுதுணையாய் இருந்து கற்றல் சூழலை எளிதாக்கவும் இனிதாக்கவும் வேண்டுகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

MUST READ