Homeசெய்திகள்தமிழ்நாடுதுணை முதலமைச்சர் என பெயர் பலகையில் மாற்றிய உதயநிதி ஸ்டாலின்

துணை முதலமைச்சர் என பெயர் பலகையில் மாற்றிய உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது இல்லத்தில் உள்ள பெயர் பலகை மற்றும் எக்ஸ் வலைதள முகப்பு பக்கத்தில் துணை முதலமைச்சர் என குறிப்பிட்டுள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், 2021 சட்டமன்ற தேர்தலின்போது சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிய அமைய முக்கிய பங்காற்றினார். அவர் எய்ம்ஸ் ஒற்றை செங்கல்லை கையில் ஏந்திச்சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர், 44வது செஸ் ஒலிம்பியாட், அண்மையில் நடைபெற்ற பார்முலா 4 கார் பந்தயம் என பல்வேறு போட்டிகளை வெற்றிகரமாக நிகழ்த்தி, தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்றினார்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் வழங்கும விதமாக துணை முதலமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நடிகர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் சுய விவரத்தில் தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சர் என மாற்றியுள்ளார். இதேபோல் தனது பசுமைவெளிச் சாலை இல்லத்தின் முகப்பில் உள்ள பெயர் பலகையில் துணை முதலமைச்சர் என மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

MUST READ