Homeசெய்திகள்தமிழ்நாடுயுஜிசி புதிய வரைவு விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி – கண்டன ஆர்ப்பாட்டம்

யுஜிசி புதிய வரைவு விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி – கண்டன ஆர்ப்பாட்டம்

-

- Advertisement -

யுஜிசி புதிய வரைவு விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.யுஜிசி புதிய வரைவு விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி – கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும், ஒன்றிய அரசின் ஏஜெண்டாக தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஆளுநர் ரவியை விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம் என்று போராட்டகாரர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில பொதுச் செயலாளர் அன்பு, கல்வித்துறையை கார்ப்பரேட் மற்றும் காவி மயமாக்கி காவி முதலாளிகளிடம் ஒப்படைக்கும் வேளையில் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாத மாநிலங்களுக்கான நிதியை நிறுத்தி வைத்து அராஜகம் செய்து வருகிறது என்றும், ஒன்றிய அரசும் யுஜிசியும் செய்யும் இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மாநில பொதுச்செயலாளர், அன்பு. இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த 50 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சர்வதேச செஸ் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன்!

MUST READ