Homeசெய்திகள்தமிழ்நாடுSSA திட்ட நிலுவை நிதியை நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஸ்...

SSA திட்ட நிலுவை நிதியை நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தல்

-

சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான நிதியை எந்த வித நிபந்தனைகளும் இன்றி தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அனபில் மகேஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அனபில் மகேஸ் வெளியிட்டு உள்ள  எக்ஸ் வலைதள பதிவில், 1930கள் மற்றும் 60களின் வரலாற்று இயக்கங்களில் வேரூன்றிய இருமொழிக் கொள்கையின் மூலம் தமிழ்நாடு தனது மொழியியல் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் எப்போதும் உறுதியாக உள்ளதாகவும், தமிழை நமது அடையாளத்தின் தூணாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், வருங்கால சந்ததியினர் ஆங்கிலப் புலமை பெற்றிருப்பதை உறுதிசெய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

dharmendra pradhan

மேலும் தமிழை அடிப்படையாக கொண்டு உள்ளடக்கிய கற்றலுக்கு முன்னுரிமை அளிப்பதே எங்கள் கொள்கை என்றும், அதே நேரத்தில் எங்களது மாணவர்களுக்கு ஆங்கில அறிவையும் மேம்படுத்துவோம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் குறிப்பிட்டு உள்ளார். பொறியியல், மருத்துவம் போன்ற தொழில்நுட்பப் பாடங்களைக்கூட மொழிபெயர்த்து, தமிழில் கல்விப் பொருட்களை வெளியிடுவதில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி,  எண்ணும் எழுத்து போன்ற திட்டங்களின் மூலம் தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பல்வேறு இலக்குகளை தமிழ்நாடு ஏற்கனவே
எட்டிவிட்டதாக அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். எனவே சம்க்ரா சிக்சா அபியான் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள தமிழ்நா ட்டுக்கா ன நிதியை எந்த
நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

MUST READ