
கோயில்களில் நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி மறுப்பது கண்டனத்திற்குரியது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நடிகை ஷகிலா மீது தாக்குதல்… வளர்ப்பு மகள் மீது புகார்…
பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “வரும் ஜனவரி 22- ஆம் தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசுத் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200- க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.
இந்து அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோயில்களில் ராமர் பெயரில் பூஜை நடத்தவும், அன்னதானம் வழங்கவும் நாளை (ஜன.22) அனுமதிக்கப்படவில்லை. தனியாருக்கு சொந்தமான கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பூர்ணிமா ரவி நடிக்கும் புதிய படம்…. விரைவில் வெளியாகும் பர்ஸ்ட் லுக்!
கோயில்களில் நாளை ராமர் பெயரில் பூஜை நடத்த தடை என்ற தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்து சமய அறநிலையத்துறை, கோயில்களில் நாளை வழக்கமான பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.