மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியில் பாகுபாடு காட்டும் மத்திய அரசுக்கு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நயன்தாராவை தொடர்ந்து தொழிலதிபராக உருவெடுக்கும் நடிகை சினேகா!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காணொளி வெளியிட்டுள்ளார். அதேபோல், டெல்லியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த போராட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அதில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு காட்டும் பாகுபாடு, ஆக்சிஜனை நிறுத்துவதற்கு சமம். மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. கூட்டாட்சி தத்துவத்தைப் பாதுகாக்கவே இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுனுக்காக மீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி!
அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பா.ஜ.க.வை ஆட்சியை விட்டு வெளியேற்றுவோம். மாநிலங்களுக்கு முதலமைச்சர்கள் இருப்பது பிரதமருக்கு பிடிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களை நகராட்சி போல் நினைக்கிறார். அனைத்து மாநில அரசுகளும் நிதி நெருக்கடி பேரிடரை சந்திக்கிறது” என்று மத்திய அரசு மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.