சென்னை ஆவடி அருகே மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்து பூவிருந்தவல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
“சாதி, மதம் பற்றி பேசி ஏன் வாக்கு சேகரிக்கிறார்கள்?”- பிரியங்கா காந்தி கேள்வி!
ஆவடியை அடுத்த மிட்டினம்பள்ளியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர், கடந்த 2002- ஆம் ஆண்டு 10- க்கும் மேற்பட்டவர்களிடம் மத்திய ரிசர்வ் காவல் படையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்திருக்கிறார்.
ஆந்திராவில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் கைது!
இது குறித்த புகாரின் அடிப்படையில், கடந்த 2005- ஆம் ஆண்டு சிறைச் சென்ற அவர், பிணையில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கு தொடர்ந்து பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியதுடன், பாதிக்கப்பட்டோருக்கு 6.34 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.