சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வுச் செய்ய குழு அமைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
கூகுள் பே போன்ற செயல்களில் பணத்தைக் கடனாகப் பெறும் வசதி!
ஆளுநரின் உத்தரவுப் படி, ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் தலா நான்கு உறுப்பினர்களைக் கொண்டத் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்களைத் தேர்வுச் செய்யும் குழுவில் முதல்முறையாக யூஜிசியின் பிரதிநிதி இடம் பெற்றுள்ளார். குறிப்பாக, ஆளுநர், தமிழக அரசு, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் சார்பிலான பிரதிநிதிகளுடன் யூஜிசியின் பிரதிநிதியும் இடம் பெற்றுள்ளார்.
தேர்வுக் குழு பரிந்துரைக்கும் மூன்று பேரில் ஒருவரை பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் தேர்வு செய்வார்.
எஸ்.பி.ஜி. பாதுகாப்புப் படை இயக்குநர் அருண் குமார் சின்ஹா காலமானார்!
யூஜிசி விதியை மட்டும் பின்பற்றினால் போதும், உறுப்பினரைச் சேர்க்கத் தேவையில்லை என தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.