Homeசெய்திகள்தமிழ்நாடு"பல்கலை. வரலாற்றில் முக்கியமான நாள்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“பல்கலை. வரலாற்றில் முக்கியமான நாள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

 

"பல்கலை. வரலாற்றில் முக்கியமான நாள்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: TN Govt

சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “யாராலும் பறிக்க முடியாத சொத்து என்பது கல்வியறிவு தான். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வந்தது சென்னை பல்கலைக்கழக வரலாற்றில் முக்கியமான நாள். சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்ற உங்களின் சீனியர் என்ற அடிப்படையில் நான் இங்கு வந்துள்ளேன். இந்திய தலைச்சிறந்த பல்கலைக்கழகங்களில் 21 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.

அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

நாட்டின் தலைச்சிறந்த பொறியியல் கல்லூரிகளில் 35 கல்லூரிகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. நாட்டின் தலைச்சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் 9 கல்லூரிகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. மாணவர்கள் ஒரு பட்டத்தோடு நிறுத்தி விடாமல் தொடர்ந்து படிக்க வேண்டும். தகுதியான வேலை கிடைத்த பிறகும் படிப்பை நிறுத்தி விடாதீர்கள்” என்று மாணவ, மாணவிகளை அறிவுறுத்தினார்.

பாஜகவினர் ஊடகத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்- அன்வர் ராஜா

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.

MUST READ