சென்னை பல்கலைக்கழகத்தை தனியாருக்கு தாரை வார்த்து விட்டார்களா என்று எழுத்தாளர் சாவித்திரி கண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களை தனியாரிடம் தரும் கொள்கையுடன் மத்திய, மாநில அரசுகள் படிப்படியாக காய் நகர்த்தி வருகின்றன!
மூதாட்டியை ஏமாற்றி தங்கத் தோடு கொள்ளை- கொள்ளையனை சிக்க வைத்த முதியவர்!
இது வெறும் நிதி பற்றாக் குறை பிரச்சினை மட்டுமா? நேர்மை பற்றாக்குறையும், நிர்வாக திறனின்மையும் கூடத் தான்!
1990 தொடங்கி அடுத்தடுத்து வந்த தமிழக ஆட்சியாளர்களின் கறைபடிந்த செயல்பாடுகளும், அவர்களோடு கைகோர்த்த கல்வியாளர்களின் பேராசைகளும் காரணம். தாராளமயமாக்களால் உயர்கல்வித் துறைக்குள் நுழைந்த தனியார் நிறுவனங்கள் கற்றலின் நோக்கத்தையும், அதற்கான நெறிமுறைகளையும் துச்சமாக்கி, முழுக்க, முழுக்க கல்வியை வணிகப் பொருளாக்கியதும், அதற்கு மத்திய, மாநில அரசுகள் இசைந்து கொடுத்ததும் காரணம்.
சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் என்பது மட்டுமே என்ற நிலை மாறி இன்று கல்வி தாராளமயத்தின் வீச்சின் விளைவாக நிகர்நிலை பல்கலைகழகங்களும், தனியார் பல்கலைகழகங்களும் திசைக்கு ஒன்றாக பொது பல்கலைகழகங்களும் துறைக்கு ஏற்றார் போல் இணை பல்கலைகழகங்களும் பெருகி வளர்ந்துள்ள சூழலில், ‘அரசு ஏன் லாபமில்லாத பல்கலைக் கழகங்களை தூக்கிச் சுமக்க வேண்டும்..?’ என நினைப்பது ஒரு காரணம்.
திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் அதிரடி நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை!
மானிய வெட்டு, தொலைதூரக் கல்வி மூலம் வரும் வருமானம் மிகவும் குறைந்து போனது, ஓய்வூதியச் சுமை ஆகிய மூன்று பிரதான பிரச்சினைகள் சென்னை, மதுரை பல்கலைகழகங்களை நிலைகுலைய வைத்துள்ளது.
சென்னை, மதுரை பல்கலைக் கழகங்கள் அரசின் பல்கலைக் கழகங்களில்லையாம்! பல நூறு கோடி வரி விதிப்பார்களாம்..! பல மாதங்கள் சம்பள பாக்கி! மின் கட்டண பாக்கி, மாணவர்களின் வினாத்தாள்களை திருத்த முடியாத நிலைமை.. தமிழக அரசு மெளனிக்கிறது! உண்மையான பின்னணி என்ன? (லிங்க் பார்க்க)
1857- ல் பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகம் நோபல்பரிசு பெற்ற மேதைகள் மட்டுமின்றி உயர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், ஐந்து குடியரசுத் தலைவர்கள்..போன்ற ஏராளமான பேராளுமைகளை நாட்டுக்கு தந்த கல்வி ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனத்தை இன்று புதிதாக, ”இது அரசு நிறுவனமல்ல” எனச் சொல்லி வருமான வரி போடுவது எப்படி? ”ஏழை, எளிய மாணவர்களிடம் குறைந்த கட்டணம் வாங்காதே, கொள்ளையடித்து வாழ்ந்து கொள்” என பட்டவர்த்தனமாக சொல்லாமல் உணர்த்துகிறார்கள்!