Homeசெய்திகள்தமிழ்நாடு"திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் அதிகரிக்கும் தீண்டாமை வன்கொடுமை" - இளமுருகு முத்து குற்றச்சாட்டு

“திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் அதிகரிக்கும் தீண்டாமை வன்கொடுமை” – இளமுருகு முத்து குற்றச்சாட்டு

-

- Advertisement -

“திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் அதிகரிக்கும் தீண்டாமை வன்கொடுமை” – நடவடிக்கை எடுக்க கோரி தேசிய பட்டியலின ஆணையத்தில் அம்பேத்கர் மக்கள் சார்பில் கோரிக்கை."திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் அதிகரிக்கும் தீண்டாமை வன்கொடுமை" - இளமுருகு முத்து குற்றச்சாட்டுதிருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில்  தீண்டாமை வன்கொடுமை அதிகரித்துள்ளதாகவும் தேசிய ஆணையம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லியில் தேசிய பட்டியலின ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானாவை நேரில் சந்தித்து அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவர் இளமுருகு முத்து கோரிக்கை மனு அளித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  இளமுருகு முத்து, தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பட்டியலின மக்கள், பெண்கள், மாணவர்கள் தீண்டாமை வன்கொடுமைகளால் பாதிக்கப்படுகின்றன. அனைத்திற்கும் மேலாக திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் மிகப்பெரிய தீண்டாமை வன்கொடுமை நடைபெறுகிறது. அத்தொழில்சாலையில் எஸ்சி பிரிவு தலைவரான ரமேஷ் குமார் என்பவர், அங்கு நடைபெறும் தீண்டாமை வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பதன் காரணமாகவும், இட ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்புவதால் அவருடைய பதவி உயர்வு கடந்த 15 வருடங்களாக நிர்வாகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் தேசிய பட்டியலின ஆணையரிடம்,சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு சென்று ஆய்வு நடத்தி,பாதிக்கப்பட்டவருக்கு உரிய நீதி கிடைத்திடவும் பாதிக்கப்பட்டவரின்  பதவி உயர்வு உறுதி செய்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.ஆணையத்தின் தலைவரும் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நீதி கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசிடம் பலமுறை புகார்கள் அளித்தும் ,எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த வருடம் திருநெல்வேலி நாங்குநேரியில் மாணவர் ஒருவர் நன்றாக படித்ததன் காரணமாக அந்த மாணவரின் கைகள் வெட்டப்பட்டது, இன்று அதேபோல் நாங்குநேரி அருகே உள்ள மற்றொரு ஊரில் ( தூத்துக்குடி) மாணவர் ஒருவர் நன்றாக கபடி விளையாடியதற்காக கை மற்றும் கால்களை வெட்டியுள்ளனர்.

மற்றொரு பகுதியில் பட்டியலின சிறு ஒருவர் காலனி அணிந்து சென்றதால் தாக்கப்பட்டுள்ளார், மற்றொரு சம்பவத்தில் பட்டியலின இளைஞர் இரு சக்கர வாகனத்தில் சென்றதால் வெட்டப்பட்டார், அனைத்திற்கும் மேலாக மனித இனமே கண்டிடாத வேங்கை வயல் வன்கொடுமை அரங்கேறியது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பட்டியலினத்தவர்கள் மீதான வன்கொடுமை அதிகரித்து வருகிறது ஆனால் மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என  நம்பிக்கையில்லா காரணத்தினால் தேசிய பட்டியலின ஆணையத்தை நாடினோம்.

இதற்கு முன்பு வேங்கை வயல் விவகாரத்தை தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று மாநில அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால்  பட்டியலின மக்களை தமிழக அரசு இரண்டாம் தர குடிமக்களாக தான் பார்க்கிறது என்பது எனது குற்றச்சாட்டு. இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கப்பெறுவது தமிழக அரசின் கையில் உள்ளது என்று தெரிவித்தார்.

சிறு குறு உற்பத்தியாளர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

MUST READ