Homeசெய்திகள்தமிழ்நாடு'UPS' நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

‘UPS’ நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

 

'UPS' நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: TN Govt

சென்னை போரூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று (ஆகஸ்ட் 28) காலை 10.00 மணிக்கு தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட சரக்கு போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மையில் உலகளவில் முன்னணியில் உள்ள ‘United Parcel Service’ நிறுவனம், இந்தியாவில் முதலாவதாக, சென்னை போரூரில் அமைத்துள்ள தொழில்நுட்ப மையத்தைத் திறந்து வைத்தார்.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா- நாளை கொடியேற்றம்

அதைத் தொடர்ந்து, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அம்மையத்தில் உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புக்கான பயிற்சி பெறுவதற்கு அனுமதி கடிதங்களையும் வழங்கினார்.

ஆவடி மாநகராட்சியில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சாலை விழிப்புணர்வு பேரணி:

இந்த நிகழ்ச்சியில், தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறைக் கூடுதல் செயலாளர் கிருஷ்ணன் இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் விஷ்ணு இ.ஆ.ப., ‘UPS’ நிறுவனத்தின் உலகளாவிய தலைமை டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப அலுவலர் பாலசுப்ரமணியன், தலைமை மனித வள அலுவலர் டேரல் ஃபோர்டு, இந்தியாவிற்கான துணைத் தலைவர் சுப்ரமணி ராமகிருஷ்ணன் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

MUST READ