Homeசெய்திகள்தமிழ்நாடுமூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தல் - பி.எஸ். அமல்ராஜ்

மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தல் – பி.எஸ். அமல்ராஜ்

-

மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்படி இந்திய பார் கவுன்சிலுக்கு வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக கவுன்சிலின் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தல் - பி.எஸ். அமல்ராஜ்

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அனைத்து பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் அடங்கிய கூட்டு குழுவை அமைத்து சட்டங்களை திரும்பப் பெற கோரி பிரதமர், உள்துறை மற்றும் சட்ட அமைச்சரை வலியுறுத்தும்படி இந்திய பார் கவுன்சிலுக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கக்கூடிய இந்த மூன்று சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அமல்ராஜ், இது குறித்து ஏற்கனவே பார் கவுன்சிலிடம் ஒன்றிய அரசு கருத்து கேட்டபோது தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் கூறிய கருத்துக்களை எதுவும் பரிசிலிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தல் - பி.எஸ். அமல்ராஜ்

மூன்று சட்டங்கள் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், அமைத்துள்ள ஒரு நபர் ஆணையத்தை வரவேற்பதாகவும் பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல் துறை அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

குற்ற வழக்குகளில் தொடர்புடைய வழக்கறிஞர்களை பார் கவுன்சிலில் இருந்து நிரந்தரமாக நீக்குவது குறித்து ஆலோசிக்கப்படும். இதுவரை 116 பேர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாக பி.எஸ்.அமல்ராஜ் தெரிவித்தார்.

காவிரி பாசன மாவட்டங்களில் மிக அதிக பரப்பளவில் சம்பா சாகுபடி செய்வதற்கான வசதிகளை அரசு செய்து தர வேண்டும் – அன்புமணி

வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருவதால் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தப்படும் என்றும் தமிழகத்தில் குற்ற பின்னணி இல்லாதவர்கள் மட்டுமே வழக்கறிஞர்களாக பதிவு செய்யப்பட்டு வருகின்றனர் என்றும் அமல்ராஜ் பதிலளித்தார்.

MUST READ