விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் இரண்டாவது நாளாக தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதே நேரம் மற்ற இடங்களில் நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது.
“ஆளுநருடன் பேசியது என்ன?”- எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜுனா, கடந்த மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைந்துக் கொண்டார். அவருக்கு கட்சியில் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், சட்டவிரோதப் பணபரிமாற்ற புகாரின் அடிப்படையில், சென்னை போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
பொதுவிநியோகத் திட்டத்தில் பொருட்கள் வழங்கும் ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை நிறைவுப் பெற்றது. முன்னதாக, கடந்த 2022- ஆம் ஆண்டு தமிழகத்தில் அரசு வழங்கிய இலவச பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, ஒப்பந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அம்பத்தூரில் 200 கிராம் மெத்தம்பெட்டமைன் போலீசார் பறிமுதல் – இருவர் கைது!
அதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறையினரின் சோதனையானது நடைபெற்று வருகிறது.