Homeசெய்திகள்தமிழ்நாடுகூட்டுறவுத் துறையில் தொடர்ந்து காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது- அமைச்சர் பெரியகருப்பன்

கூட்டுறவுத் துறையில் தொடர்ந்து காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது- அமைச்சர் பெரியகருப்பன்

-

“கூட்டுறவுத் துறை சங்க தேர்தல் 60% பேர் தங்களது ஆதார் மற்றும் குடும்ப அட்டையை இணைத்துள்ளனர். மீதமுள்ள 40% பேர் தங்களது அடையாள அட்டைகளை இணைத்த பிறகு தான் தேர்தலை நடத்த முடியும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.”

கூட்டுறவுத் துறையில் தொடர்ந்து காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது- அமைச்சர் பெரியகருப்பன்

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை நினைவு கூறும் வகையில் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலக வளகத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவரங்கம்–“வானவில்” கூட்டரங்கத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

மேலும் கூட்டுறவு நிறுவன பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினையும், 2023 ஆம் ஆண்டு சிறந்த செயல்பாடுகளுக்காக தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட சங்கங்களுக்கு கேடயங்கள், சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளை வழங்கினார்.

கூட்டுறவுத் துறையில் தொடர்ந்து காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது- அமைச்சர் பெரியகருப்பன்

தொடர்ந்து விழா அரங்கில் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள், ஏழைகள், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்க்காக 100 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களுக்கு சேவை செய்கின்ற துறையாக இந்த துறை உள்ளது.

ஒவ்வொரு துறையிலும் பணிகள் விரைவாக தங்கு தடை இன்றி நடக்க வேண்டும் என்றால் அதற்கு காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அப்படி நிரப்புவதன் மூலமாக வேலை வாய்ப்புகளும், தேவையான அலுவலர்கள் இருந்தால்தான் அந்த துறை சிறப்பாக செயல்பட முடியும்.

கூட்டுறவுத் துறையில் தொடர்ந்து காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது, காலிப் பணியிடங்களை நிரப்பும் துறையாக இந்த துறை உள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார். கலைஞர் பெயரில் இந்த அரங்கத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் தெரிவித்தார்.

கூட்டுறவுத் துறையில் தொடர்ந்து காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது- அமைச்சர் பெரியகருப்பன்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர் பெரியகருப்பன், குடும்ப அட்டைகளை வழங்குவதை பொறுத்தவரையில் உணவுத்துறையில் தான் செய்து வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கொடுப்பதற்கான கணக்கெடுப்புகள் நடந்த காரணத்தினால் புதிய காடுகள் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருந்தனர். மீண்டும் அதை கொடுப்பதற்கான பணிகளை அவர்கள் துவங்கி இருப்பார்கள் கூடிய விரைவில் அது வரும். கூட்டுறவுத்துறைக்கு குடும்ப அட்டையை வழங்குவது மட்டும் தான் வேலை, கொள்முதல் செய்வது குடும்ப அட்டை கொடுப்பது உள்ளிட்டவைகள் உணவுத்துறை சார்பில் தான் செய்வார்கள்.

கூட்டுறவுத் துறையில் 50 பெட்ரோல் பங்க் உள்ளது. அனைத்தும் லாபகரமாக இயங்கி வருகிறது. இன்னும் 25 இடங்களுக்கு மேற்பட்ட இடங்களில் பெட்ரோல் பங்க் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவு? எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு.. (apcnewstamil.com)

கூட்டுறவுத்துறை சார்பில் கொடுத்த 44 அறிவிப்புகளையும் செய்து முடித்து விட்டோம். கடந்த காலங்களில் கூட்டுறவு தேர்தல் பேரளவில் தான் நடந்தது. 1 கோடியே 92 லட்சம் உறுப்பினர்கள் இருந்த இடத்தில் 65 லட்சம் உறுப்பினர்கள் பெயர் பட்டியலில் இடம்பெற்று இருந்ததெல்லாம் போக்கஸ் போலியான பெயர்களை அதில் சேர்த்து வைத்திருப்பார்கள்.

அதுபோன்ற தேர்தலை நடத்தக்கூடாது என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் அது எல்லாம் நீக்கிவிடப்பட்டது. அது எல்லாம் பட்டியலில் தொடர்வது நியாயம் இல்லை, மீதமுள்ளவர்களையும் ஆதார் அட்டை இணைக்க வேண்டும், குடும்ப அட்டையை இணைக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதன் அடிப்படையில் 60 சதவீதம் பேர் இணைத்துள்ளனர் மீதமுள்ள 40% பேரும் இணைத்த பிறகு தான் தேர்தலை நடத்த முடியும்.

கோவை: டிப்பர் லாரி மோதி ஆசிரியை பலி (apcnewstamil.com)

தமிழ்நாட்டில் 2 கோடியே 18 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் அட்டைகள் நடைமுறையில் உள்ளது என்று கூறினார்.

MUST READ