Homeசெய்திகள்தமிழ்நாடுதடுப்பூசி போட்ட 3 மாத குழந்தை உயிரிழப்பு

தடுப்பூசி போட்ட 3 மாத குழந்தை உயிரிழப்பு

-

- Advertisement -

தடுப்பூசி போட்ட 3 மாத குழந்தை உயிரிழப்பு

பல்லடம் அருகே தடுப்பூசி செலுத்திய நிலையில், 3 மாத ஆண் குழந்தை  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அய்யம்பாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருபவர் கபிலன். இவருக்கு ஏஞ்சலினா என்ற மனைவியும்ம் சுஜன் என்ற 3 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். நேற்று முத்தாண்டிபாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சுஜனுக்கு தடுப்பூசி செலுத்திவிட்டு வந்துள்ளனர். இரவு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த ஏஞ்சலினா  தூங்க வைத்துள்ளார்.

இன்று காலை எழுந்து பார்த்த போது சுஜன் மூக்கில் ரத்தம் வந்த நிலையில், நினைவில்லாமல் இருந்துள்ளான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சுஜனை எடுத்து வந்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பல்லடம் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடுப்பூசி செலுத்தியது தான் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று மாத ஆண் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ