Homeசெய்திகள்தமிழ்நாடுமதுவிலக்கு சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது - வைகோ

மதுவிலக்கு சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது – வைகோ

-

மதுவிலக்கு சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்கும் வகையிலும், அவற்றை விற்பனை செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையிலும், ‘தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா 2024′ ஜூன் 29 அன்று தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.கள்ளச்சாராயத்தைத் தயாரித்து விற்பவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையிலும், பிணைமுறிவை நிறைவேற்ற நிர்வாகத் துறையின் நடுவருக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கள்ளச்சாராய குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும், தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937இல் இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டு சட்ட முன் வரைவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச் சட்ட திருத்தத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி அவர்கள் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.மதுவின் கொடுமையில் இருந்து மக்கள் நிரந்தரமாக விடுபட முழு மதுவிலக்கு ஒன்றே தீர்வு என்பதை மறுமலர்ச்சி திமுக சார்பில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ