Homeசெய்திகள்தமிழ்நாடுவிஜயகாந்த் மறைவையொட்டி வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ரத்து..

விஜயகாந்த் மறைவையொட்டி வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ரத்து..

-

- Advertisement -
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவை ஒட்டி, சென்னையில் இன்று நடக்க இருந்த வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டம் நடைபெற்று நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தப் போராட்டத்தின் நூற்றாண்டினை ஒட்டி தமிழக அரசு சார்பில் ஓராண்டு காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள பெரியார் திடலில் ‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா’ நடைபெற இருந்தது. நந்தம்பாக்கத்தில் இன்று நடக்க இருந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்க இருந்தனர். இதில் தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலரினை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, கேரள முதல்வர் பினராயி விஜயன் பெற்றுக்கொள்ள இருந்தார்.

விஜயகாந்த்

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி , வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த, தமிழகம் முழுவதில் இருந்தும் மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் கோயம்பேடு பகுதி முழுவதும் மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்துள்ளது. அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்தச்சூழலில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ