Homeசெய்திகள்தமிழ்நாடுவைகுண்ட ஏகாதசியையொட்டி, வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் 'பூலோக வைகுண்டம்'!

வைகுண்ட ஏகாதசியையொட்டி, வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ‘பூலோக வைகுண்டம்’!

-

 

வைகுண்ட ஏகாதசியையொட்டி, வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் 'பூலோக வைகுண்டம்'!
Video Crop Image

வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, ஸ்ரீரங்கம் நகரமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. அதன் பருந்து பார்வை காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

சூப்பர் ஸ்டாரின் பர்த்டே ட்ரீட் ரெடி…. ‘தலைவர் 170’ அப்டேட்!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று (டிச.12) முதல் ஜனவரி 2- ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு, இந்த மாதம் 23- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, ரங்கநாதர் கோயிலில் கோபுரங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இதனால் ஸ்ரீரங்கம் நகரமே மின்னொளியில் ஜொலிக்கிறது. இதன் பருந்து பார்வை காட்சிகள் காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது.

நடிகராக நடிக்கும் கவின்…. ஸ்டார் படத்தின் முக்கிய அறிவிப்பு!

வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருச்சி மாநகரத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநகர காவல் ஆணையர் காமினி, “வைகுண்ட ஏகாதசியையொட்டி, மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 236 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ