Homeசெய்திகள்தமிழ்நாடுகலைஞர் கண்டிருந்தால் கவிதை பாடியிருப்பார் - கவிஞர் வைரமுத்து

கலைஞர் கண்டிருந்தால் கவிதை பாடியிருப்பார் – கவிஞர் வைரமுத்து

-

இன்று புதிதாக திறக்கப்படவுள்ள கருணாநிதி நினைவிடத்தை கவிஞர் வைரமுத்து பார்வையிட்டார்.

கடந்த 2021- ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததும், அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். நினைவிடம் கட்டுமான பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடத்தையும் இன்று மாலை 07.00 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்கள் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன.

திறக்கப்படவுள்ள கலைஞர் நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்!

இந்நிலையில் புதிதாக திறக்கப்படவுள்ள கருணாநிதி நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து பார்வையிட்டார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கலைஞர் நினைவிடம் கண்டு சிலிர்த்தேன் கலைஞரின்
கையைப் பிடித்துக்கொண்டே கலைஞர் நினைவிடம் சுற்றிவந்த உணர்வு இது தந்தைக்குத் தனயன் எழுப்பிய மண்டபமல்ல தலைவனுக்குத் தொண்டன் கட்டிய தாஜ்மஹால்” இப்படியோர் நினைவிடம் வாய்க்குமென்றால் எத்தனை முறையும் இறக்கலாம்” கலைஞர் கண்டிருந்தால் கவிதை பாடியிருப்பார் உருவமாய் ஒலியாய்
புதைத்த இடத்தில் கலைஞர் உயிரோடிருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ