நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!
தி.மு.க.- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.கவின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ஒரு பொதுத்தொகுதி உள்பட மூன்று தொகுதிகளை ஒதுக்குமாறு தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்ததாகவும், பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!
இதையடுத்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொல்.திருமாவளவன் எம்.பி. ஆகியோர் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., “தி.மு.க. ஒதுக்கிய இரண்டு தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வி.சி.க. போட்டியிட பானை சின்னம் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தொகுதிகளை பகிர்ந்துக் கொண்டோம். அனைத்துச் சூழல்களையும் கருத்தில் கொண்டே இரு தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ளோம்” என்றார்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!
கடந்த 2019- ஆம் ஆண்டு சிதம்பரத்தில் திருமாவளவன், விழுப்புரத்தில் ரவிக்குமார் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.