காய்ச்சல் காரணமாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான தொல்.திருமாவளவன், திடீர் காய்ச்சல் காரணமாக, நேற்று (செப்.25) இரவு சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடுரோட்டில் போதை ஆசாமி அட்டகாசம்
முன்னதாக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பங்கேற்ற பின், தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைத் தொடக்க நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொண்டார். ஓய்வெடுக்க மருத்துவர்கள், அவரை அறிவுறுத்தியுள்ளதால், வரும் செப்டம்பர் 30- ஆம் தேதி வரை கட்சி நிர்வாகிகள் சென்னை வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.