Homeசெய்திகள்தமிழ்நாடுவாகன காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்!

வாகன காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்!

-

 

வாகன காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்!
Video Crop Image

கனமழையால் சேதமடைந்த வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்கிட வேண்டுமென்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்.

சூர்யாவின் ‘கங்குவா’- வில் நடிப்பதை உறுதி செய்த….’அனிமல்’ பட வில்லன்!

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட 13 முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள், இதுவரை 600 இருசக்கர வாகனங்கள், 1,275 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 445 வணிக வாகனங்கள் என 2,320 வாகனங்களுக்கு காப்பீட்டுத் தொகைக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதுவரை பெற்ற விண்ணப்பங்கள் மட்டுமின்றி, இனி வரும் நாட்களில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கும் உடனடியாக தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும், மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அமீரின் மாயவலை…. தள்ளிப்போன டீசர் ரிலீஸ்…. புதிய தேதி அறிவிப்பு!

வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாம்களை நடத்தி காப்பீடுகளின் மூலம் இழப்பீடு பெறுவது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், சேதமடைந்த வாகனங்களை நேரில் சென்று ஆய்வுச் செய்து காப்பீட்டு தொகையைத் துரிதமாக மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

MUST READ