Homeசெய்திகள்தமிழ்நாடுவெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி... மிரட்டி எடுக்கும் மிக்ஜம் புயல்!

வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி… மிரட்டி எடுக்கும் மிக்ஜம் புயல்!

-

வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி... மிரட்டி எடுக்கும் மிக்ஜம் புயல்!கடந்த நூறு ஆண்டுகளில் பெய்த கனமழைகளில் மிக்ஜம் புயலால் ஏற்பட்டுள்ள அதிகனமழையும் முக்கிய இடம் பெற்றுள்ளது. பல்வேறு இடங்களில் கழுத்தளவு மூழ்கும் வரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடற்கரை ஓர பகுதிகளில் மிக்ஜம் புயல் கோர தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக பழவேற்காடு போன்ற பகுதிகளில் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடல் நீரில் அடித்து செல்லப்படும் காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பின் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. வேளச்சேரி, கீழ்பாக்கம் போன்ற இடங்களும் வெள்ள நீரால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே மீட்பு குழுவினர், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி... மிரட்டி எடுக்கும் மிக்ஜம் புயல்!இந்நிலையில் விடாது பெய்து வரும் அதிகன மழையால் வேளச்சேரி விஜயநகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இடுப்பளவுக்கு சூழ்ந்த தண்ணீரால் அங்கு வசிக்கும் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைக்காக மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு நீர் தேங்கி இருப்பதால் குழந்தைகள் பெண்கள் வயதானவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

MUST READ